சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருவதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிக அளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை டிஆர்பி மூலம் தான் கண்டறிய முடியும். அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து வரும் சன் டிவி இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் புதிய சீரியல் ஆன மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 9. 82 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கயல் சீரியல் இந்த வாரம் 9.12 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக கடைசி இடங்களை பிடித்து வரும் விஜய் டிவி சீரியல்கள் இந்த வாரம் முந்திக்கொண்டு சிறகடிக்க ஆசை சீரியல் பலவிதமான திருப்பங்களுடன் மக்களை கவர்ந்த நிலையில் 8.57 புள்ளிகளைப் பற்றி இந்த வாரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 8 புள்ளி 36 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அன்னம் சீரியல் ஆறாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் இராமாயணம் சீரியல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக விரைவில் முடிவுக்கு வரவுள்ள விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 7 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.93 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.