சீனா ஒவ்வொரு கண்டுபிடிப்புகளையும் புதிது புதிதாக கண்டுபிடித்து உலகத்துக்கு முன்னோடியாக கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனா சமீப காலத்திற்கு முன்பு கண்டுபிடித்த AI chatbot இன் ஒரு வெர்ஷன் தான் DeepSeek. இந்த DeepSeek வந்த காலத்தில் இருந்தே அதிக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த DeepSeek சாட்போட் குறித்து பலவித செய்திகளும் தினம் தோறும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது பல நாட்டு அரசுகள் இந்த DeepSeek செயலியை தடை செய்து வருகிறது. இதனால் என்ன பிரச்சனை உருவாகும் தடை செய்ய என்ன காரணம் என்பதை பற்றி இனி காண்போம்.
சீனாவை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த DeepSeek சாட்போட். கடந்த மாதம் இது அறிமுகம் செய்யப்பட்டது. உலகளவில் இந்த DeepSeek பெரும் விவாதத்திற்குரிய ஒரு பொருளாக மாறி இருக்கிறது. இந்த செயலியின் தரவு பாதுகாப்பு அவ்வளவு நம்பகதன்மை கொண்டதாக இல்லை என்று கூறி வருகிறார்கள்.
தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளும் DeepSeek- க்கு எதிராக குரலை எழுப்பி வருகின்றது. ஆஸ்திரேலியா அரசு சாதனங்களில் இருந்து இந்த DeepSeek- ஐ அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த DeepSeek செயலியால் பயணர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைபர் கிரைம் அதிகாரி கூறி இருக்கிறார்.
மற்ற Chatbot களை விட மிக குறைந்த செலவில் இந்த DeepSeek சிறப்பாக செயல்படுவதாக கவனத்தை ஈர்த்த போதிலும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை இது ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்துள்ளதாக பல நிபுணர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். பல பிரச்சினைகள் எழுவதால் ரகசிய தரவுகளை பாதுகாக்க முடியாமல் போவதால் இது தடை செய்ய ஒவ்வொரு அரசுகளும் முன்னெடுப்பை ஏற்படுத்து வருகிறது.