தமிழ் ராக்கர்ஸின் பலே திட்டம்… வேட்டையனை வேட்டையாடிய சம்பவம் அம்பலம்…

By admin on ஐப்பசி 14, 2024

Spread the love

இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் ஹை பட்ஜெட் படங்களாக தான் வருகிறது. பல சிறப்பம்சங்களுடன் அனிமேஷன், VFX, தொழில்நுட்பங்கள் ஆகியவை இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்.

   

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தியேட்டர்களின் மவுசு அதிக அளவில் இருந்தது. கொரோனா சமயத்தில் பொதுமக்கள் கூட்டம் போடக்கூடாது என்று கூறியதால் தியேட்டர்களில் படம் வெளியிடப்படவில்லை. அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஓ டி டி தளங்களில் படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்தனர். மக்களுக்கு அதுவே பழகிப்போனது.

   

ஏனென்றால் தியேட்டர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி படம் பார்ப்பதற்கு பல பெண்கள் விரும்புவதே இல்லை. அதனால் வீட்டில் சாவகாசமாக பிடித்தவற்றை உண்டு கொண்டு ஓடிடியில் பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதனால் முந்தைய காலத்தில் போல் தியேட்டரில் 100 நாட்கள் 200 நாட்கள் என்று படம் ஓடவும் கூட்டங்கள் வரவும் வாய்ப்பு இல்லாமல் போனது. சிறிது காலத்திற்கு பிறகு அவர்களே ஓ டி டி யில் ரிலீஸ் செய்து விடுகின்றனர்.

 

ஆனாலும் அதற்கும் முன்பாக தியேட்டரில் படம் ரிலீஸ் ஆன அன்றைய தினமே இணையதளத்தில் படங்களை வெளியிடும் ஒரு வெப்சைட் தான் தமிழ் ராக்கர்ஸ். அவர்கள் எப்படி தான் படத்தை தியேட்டரில் இருந்து பதிவு செய்து எடுத்து போடுவார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. நடிகர்களும் இயக்குனர்களும் மக்களிடம் படங்களை தியேட்டரில் வந்து பாருங்க என்று சொன்னாலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது அந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் இன் அட்மின்களை கண்டுபிடித்து கைது செய்து இருக்கின்றனர் காவல்துறையினர். அவர்கள் தற்போது வெளியான வேட்டையன் படத்தை அவர்கள் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் எப்படி படத்தை எடுக்கிறீர்கள் என்று விசாரித்தபோது படுத்துக்கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்கள்தான் அவர்கள் குறி எனவும் படுத்துக்கொண்டே படம் பார்க்கும்போது மேலே பெட்ஷீட்டை மூடிக்கொண்டு அதற்குள் சிறிய கேமராவை வைத்து தியேட்டரில் படத்தை ரெக்கார்ட் செய்து ரிலீஸ் செய்வதாகவும் விசாரணையில் கூறியிருக்கின்றனர்.

கேரளாவில் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் அட்மினான இரு இளைஞர்கள் சட்டத்திற்கு புறம்பாக பல படங்களை திருட்டுத்தனமாக எடுத்து தங்களது வெப்சைட்டில் பதிவேற்றி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மேலும் இவர்களிடம் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.