தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக இருப்பதால் கவனத்துடன் கையாண்டு வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலைமை வரும் தலைமை வெறி அதனை சறுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் முக்கிய தலைவர்களின் விலகலும் மாற்றுக் கட்சியில் இணைவதும் அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஈபிஎஸ் இரட்டை இலையின் வாக்கு எப்போதும் மாறாது என கூறி வருகின்றார்.
பாஜக அதிமுகவுடன் கூட்டறியில் இருந்து வரும் நிலையில் இ.பி.எஸ்க்கு எதிராக இருப்பவர்களை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் அவருடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். ஆனால் இவர்களின் இந்த சந்திப்பில் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் வேறு சில தகவல்களை கூறுகின்றன.
அதாவது ஓபிஎஸ், நான் தனி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் பாஜகவில் இணைய போவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் முக்குலத்தோர் வாக்குகள் ஓபிஎஸ்-க்கு அதிக அளவில் இருப்பதால், பாஜகவை தமிழகத்தில் நிலைபெற வைப்பது என்னுடைய பொறுப்பு என்றும் அவர் அமித்ஷாவுக்கு வாக்கு கொடுத்துள்ளார். இவருடைய இந்த நிலைப்பாட்டை அறிந்த ஈபிஎஸ் தற்போது அதிருப்தியில் இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றன. அதே சமயம் இந்த தகவலை உண்மையாகும் வகையில் இன்று ஜெயலலிதாவை நினைவிடத்தில் தனி கட்சி தொடங்கப் போவதில்லை என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…