தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், மகளிருக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள்..? அசத்தல் அப்டேட் சொன்ன சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!!

By Soundarya on ஆடி 28, 2025

Spread the love

சென்னையில் பேருந்து போக்குவரத்து, மின்சார போக்கு ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் ஏராளமாக இருந்தாலும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தும் எளிமையான போக்குவரத்து பேருந்தாக தான் இருக்கிறது. இதனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 27 பணிமனைகளில் இருந்து தினமும் 3,233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி சுமார் 40 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பெரும்பாலும் மாநகர பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என பேருந்துகளில் செல்வதால் கடுமையான அளவு கூட்டம் காணப்படும்.

பெண் பயணிகள் அதிகமாக பயணம் செய்யும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் விதமாக 50 மகளிர் சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறது. இதே போன்று மாணவ, மாணவிகள் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பது உறுதி செய்ய அவர்களுக்கென்று தனியாக 50 சிறப்பு பேருந்து சேவை இயக்கவும் உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

   

இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தேர்வு செய்துள்ளது. சுமார் நான்கு கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப் பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து சேவை குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு பரிசீலனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது