செமி கண்டக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030” திட்டத்தை செயல்படுத்த 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செமி கண்டக்டர் வடிவமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, சிறிய அளவிலான சிப் உற்பத்தி, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி உள்ளிட்ட ஐந்து வகையான திட்டங்களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
