BREAKING: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டு பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பாடல்களை ஒளிபரப்ப கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் டிசம்பர் 22 திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ (Physical or Psychological Harassment) எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

   

பள்ளிப் பேருந்துகளில் மாணவர்கள் உரிய பாதுகாப்புடன் வந்து செல்வதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி அங்கும் இங்குமாக ஓடாமல், உதவியாளர் துணையுடன் வகுப்பறைக்கு வருவதற்கு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.