பொங்கல் பரிசு பணம்… வந்தாச்சு ஹேப்பி நியூஸ்…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on தை 1, 2026

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

ரொக்க பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்நிலையில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் வழங்குவது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.