பரபரப்பு..! இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்… வெடிபொருட்கள் அடங்கிய பையை வீசியதால் அதிர்ச்சி…!!

By Soundarya on தை 1, 2026

Spread the love

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கோட்டுப் பகுதியில், இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானம் (டிரோன்) அத்துமீறி ஊடுருவியது. இந்திய எல்லைக்குள் சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகப் பறந்த அந்த டிரோன், ஒரு பையை வீசிவிட்டு மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்கே தப்பிச் சென்றது.  டிரோன் வீசிச் சென்ற அந்தப் பையைச் சோதனையிட்ட இந்திய ராணுவத்தினர், அதிலிருந்து ஐ.இ.டி (IED) வெடிபொருள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டெடுத்தனர்.

பூஞ்ச் செக்டாரில் உள்ள காதி கர்மாடா பகுதியில் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளது. புத்தாண்டையொட்டி ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில், இந்த ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது.