திமுகவுடன் தொடரும் பனிப்போர் – திடீரென டில்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்என் ரவி!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

தமிழக கவர்னர் ஆர்என் ரவி திடீரென நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சட்ட மசோதாக்கள் விவகாரம் மற்றும் சில நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் வெளியிடும் கருத்துக்கள் அடிப்படையில் ஆன்என் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு தற்போது அனுப்பி உள்ளார்.

இந்த சூழலில் ஆளுநர் ஆர்என் ரவி நேற்று திடீரென டில்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் வரை அங்கு இருப்பார் என்றும் அதன் பின் சென்னை திரும்புவார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.