படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம் – ஏமாந்து போன படக்குழுவினர் – இது அவரே சொன்ன தகவல்தான்!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, வழக்கமாக நான் நடிக்கும் படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பை பெறும். பாட்ஷா படத்தில், நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி படையப்பா படத்திலும் சில காட்சிகளில் நான் பஞ்ச் டயலாக்குகளை பேசியிருந்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அப்படி பேசும்போது அந்த பஞ்ச் டயலாக்குகள் எப்படியோ கசிந்து வெளியே போய் விடும் என்பதால் நாங்கள் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ரகசியத்தை பண்ணினோம்.

அதாவது கேமரா முன்பு நான் நடிக்கும் போது வசனத்தை உச்சரிக்காமல் வாயை மட்டுமே வெறுமனே அசைத்து அந்த காட்சிகளில் நடித்து படமாக்கினோம். அதனால் படப்பிடிப்பில் என்னுடன் நடித்தவர்களுக்கு கூட நான் என்ன டயாலாக் பேசுகிறேன் என்று தெரியாது. படம் வந்த பிறகுதான் நான் பேசிய என் வழி தனி வழி, கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது; அப்படி கஷ்டப்படாமல் கிடைக்கிறது எதுவும் நிலைக்காது, ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் போடா போன்ற பஞ்ச் டயலாக்குகள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.