பெண்களே நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்… ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் தமிழக அரசு… இதோ முழு விவரம்….!

By Divyamayakannan on ஆவணி 8, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக வட்டி மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை வழங்கி வருகிறது. சுய உதவி குழு உறுப்பினராக உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.10 லட்சம் வரையிலான வணிக கடனை விண்ணப்பித்து சிறு மற்றும், நடுத்தர அளவிலான தொழில்களை தொடங்குங்கள். புதிய தொழில்களை தொடங்க விரும்பும் பெண்கள் இதை இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இத்திட்டம்  மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல வருடங்களாக  பயனில் உள்ளது. குறிப்பாக இத்திட்டம் வட்டி இல்லாத கடன்கள், தொழில் பயிற்சிகள் மற்றும் நீடித்த நிதி உதவிகள் மூலமாகவே மேற்கொண்டு வருகிறது. மேலும் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம், வீட்டு வேலை செய்யும் பெண்கள் , கட்டுமான தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள் போன்ற அமைப்புசாரா துறையின் கீழ் இருக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ஓய்வு ஊதியமாக ரூ.3000 வழங்கி வருகிறது. மேலும் தகுதியானவர்கள் திட்டத்திற்கு பதிவு செய்யலாம்.

   

அடுத்ததாக தமிழக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிதி உதவி செய்து கொண்டிருக்கும் . மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்காதவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம். தற்போது, உரிமைத்தொகை வராதவர்கள் விண்ணப்பிக்கலாம். இதை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்கள் தகுதியான பரிசீலனை மற்றும் விண்ணப்ப முறைகளை சரியாக பின்பற்றி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு வழங்கும் இந்த திட்டங்கள் பெண்களின் தொழில் பயணத்திற்கு ஒரு நம்பகமான நிதி ஆதாரமாக அமையும். எனவேஇந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.