மக்களே உஷார்… உங்களுக்கு இந்த நம்பரில் இருந்து அடிக்கடி போன் வருதா?.. உடனே இத பண்ணுங்க…..!

By Divyamayakannan on ஆவணி 8, 2025

Spread the love

போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கட்டுப்படுத்த(TRAI) என்ற கொள்கையை அரசு கொண்டு வந்தது. என்னதான்அரசு தடுக்க நினைத்தாலும் பல எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வந்து தான் கொண்டிருக்கிறது. இந்த மோசடியை தடுக்க AI அடிப்படை தொழில்நுட்பத்தை ஆப்ரேட்டர்கள் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னதான் இது மாதிரியான முயற்சிகளை எடுத்தாலும் சைபர் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் இன்று வரை மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள், மக்களும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

VoIP(Voice over Internet Protocol) அல்லது இணைய வழியாக தொலைபேசி அழைப்புகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இதனால் அரசு கூறுவது சைபர் குற்ற விழிப்புணர்வு போர்ட்டலானது இணைய ஆதாரங்கள் அல்லது சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் அரசின் சக்ஷ போர்ட்டல் அல்லது செயலி வழியாக புகார் அளியுங்கள். தாய்லாந்து தொலைதொடர்பு அமைப்பான(NBTC) இன் படி VoIP(voice over internet procotal) மூலமாகவும். +698 அல்லது +697 இதுபோன்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்கின்றன. இது போன்ற அழைப்புகள் வந்தாலும் நமக்கு சந்தேகமே வராது ஏனென்றால் பார்ப்பதற்கு உன்னை போலவே இருக்கும்.

   

இது மாதிரியான எண்களின் கால் வந்தால் காலை துண்டித்து விடுங்கள். ஒருவேளை தவறி இது போன்ற  அழைப்பை எடுத்து விட்டாலும், உங்கள் தனிப்பட்ட எந்த ஒரு விஷயங்களையும் பகிராதீர்கள் நான் திரும்ப கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுங்கள். ஒருவேளை உங்களுக்கு இது போன்ற போலி அழைப்பிதழ் ஏதாவது வந்தால் உடனே சஞ்ஜா சாதி என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள் இந்த இணையதளம் அரசின் மூலமாக பொதுமக்களுக்காக ஆரம்பித்துள்ளது.