தமிழக முதலமைச்சர் 22/07/2024 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும், நகர் ஊரமைப்பு இயக்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோருக்கு இணையதளம் வாயிலாக சுய சான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை இடத்தில், 3500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் வரை உள்ள குடியிருப்பு கட்டுமானத்திற்கான புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 2025 – 2026 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, வாகன நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட 10 மீட்டர் வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு இந்தத் திட்டத்தில் உடனடியாக கட்டிட அனுமதி கிடைக்கும். இது 3/09/2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
