ஒரே இரவில் மாறியது.. CM விஜய் அதிரடி சம்பவம்… இரவோடு இரவாக வெளியான அறிவிப்பு…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மாநில நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கில் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. குறிப்பாக, உளவுத்துறை டிஐஜி உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நிர்வாக ரீதியாக பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அதேபோல், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக விஜயகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளின் செயலாளர்களும் நள்ளிரவில் அதிரடியாக மாற்றப்பட்டனர். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளதோடு, நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.