ஒரு ரேஷன் கார்டு மீது ரூ.4.54 லட்சம் கடன்…. திமுகவை கிழித்தெறிந்த அண்ணாமலை…. பரபரப்பு பேட்டி….!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தமிழக அரசின் கடன் சுமை ஒவ்வொரு தனி மனிதனையும் பாதித்துள்ளதாக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தை நிதிநிலைமை குறித்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் தற்போது ஒரு ரேஷன் அட்டை மீதான கடன் சுமை 4.54 லட்சமாக அதிகரித்துள்ளது. திமுக அரசு தொடர்ந்து வாங்கி வரும் இந்த கடனை நம்முடைய வருங்கால சந்ததியினர் தான் உழைத்து கட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். திமுகவின் இணையதளத்திலிருந்து மாவட்ட வாரியாக அழைக்கப்பட்ட வாக்குறுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் ஒரு புதிய புகாரையும் முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள் அச்சமின்றி வீதிகளில் நடமாடக்கூடிய சூழல் தமிழகத்தில் கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. மத்திய அமைச்சர் அமித்சாவின் நடவடிக்கைகளால் இந்தியாவில் நக்சல் வாதம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தின் நிலைமை மோசமாகியுள்ளது. தமிழக முழுவதும் மாற்றி மாற்றத்திற்கான குரல் ஒலிக்கின்றது. டீக்கடை முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை அனைவரும் ஆட்சி மாற்றத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

   

அடுத்த 90 நாட்கள் திமுக அரசின் அலுவலகங்களை வீதி வீதியாக கொண்டு செல்ல வேண்டும். எப்படியாவது திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் ஒற்றை குரலாக உள்ளது. பொங்கலுக்கு 3000 ரூபாய் கொடுத்தால் அனைவரும் திமுகவுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என அவர்கள் நினைக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு ஒரு ரேஷன் கார்டு மீது 2.04 லட்சமாக இருந்த கடன் தற்போது 4.54 அச்சமாக அதிகரித்துள்ளது. இந்த கடனை நாமும் நம்முடைய குழந்தைகளும் தான் கட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்த பின்பு 5 லட்சம் கோடி கடனை திமுக வாங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.