நாட்டுக்காக பாடுபட்ட ராணுவ வீரர்… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை… வெளியான திடுக்கிடும் காரணம்…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அமராவதி விசாகப்பட்டினம் அருகே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தன்னுடைய தொழிலை காப்பாற்ற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான முன்னாள் ராணுவ வீரர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வெங்கடரமணா (64) என்பவர் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு அங்கிருந்த இரும்பு ஆலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரில் சொந்தமாக ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்கி தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில காலங்களாக சூப்பர் மார்க்கெட் தொழிலில் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக வெங்கட ரமணா பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர் துவாடா ரயில் நிலைய பகுதிக்கு சென்று தண்டவாளத்தில் பெங்களூரு நோக்கி சென்ற ரயிலுக்காக காத்திருந்தார். ரயில் மிக அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று ரயில் முன் பாய்ந்தார்.

   

இந்த தற்கொலை முயற்சியில் அவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றி திரும்பிய ஒருவர் நிதி நெருக்கடியால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.