BREAKING: தமிழக மின்வாரியத்தில் ரூ.1,07,365 கோடி கடன்… வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி…!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை மாநில நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். இந்த அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான கடன் சுமையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, தமிழக மின்பகிர்மான கழகம் ஒட்டுமொத்தமாக ரூ.1,07,365 கோடி கடனிலும், மாநில போக்குவரத்துக் கழகம் ரூ.43,865 கோடி கடனிலும் இருப்பதாக நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இந்த வெளிப்படையான நிதிநிலை அறிக்கை, தமிழகத்தின் பொருளாதாரச் சூழலை சீரமைப்பதற்கான ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது. மின்வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சந்தித்து வரும் இந்த மிக மோசமான நிதி நெருக்கடியிலிருந்து அவற்றை மீட்டெடுப்பதற்கும், அடுத்தகட்ட கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த வெள்ளை அறிக்கை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.