“மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத்”… தமிழக காங்கிரஸின் அடுத்த ‘பாஸ்’ யார்?…. டெல்லியில் இருந்து வந்த ரகசிய தகவல்….!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

டெல்லியில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடவுள்ள நிலையில், கட்சியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, புதிய தமிழக காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பந்தயத்தில் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார் ஆகியோரில் ஒருவரது பெயர் இறுதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்ற முக்கியப் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.