“அப்பவே விஜய் மேல சாஃப்ட் கார்னர் வந்துடுச்சு”… திமுக கொடுத்த டார்ச்சரை ஓப்பனாக சொன்ன துரைவைகோ… ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்..!

By Nanthini on ஆனி 24, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்பொழுது காரசாரமான விவாதங்களால் சூடேறியுள்ளது. சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டை விமர்சிப்பவர்கள் அதனை ‘சோபா மாடல்’ என்று குறிப்பிட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ, “அதிமுக-திமுக கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான் நிஜமான கன்டெய்னர் மாடல்” என்று கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் நிறுத்தாமல், மதிமுகவிலிருந்து மல்லை சத்யா போன்ற முக்கிய நிர்வாகிகள் விலகியதன் பின்னணியில் திமுக தலைமைதான் செயல்பட்டது என்ற பகிரங்கமான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

கடந்த தேர்தலின் போதே தங்களை போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக பல்வேறு வழிகளில் கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்திலிருந்தே நடிகர் விஜய் மீது தனக்கு ஒரு மென்மையான போக்கு (சாஃப்ட் கார்னர்) உருவாகிவிட்டதாகவும் துரைவைகோ வெளிப்படையாகக் கூறியுள்ளார். திமுகவுடனான தற்போதைய கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் சூழலில், துரைவைகோவின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.