தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநிலத்தின் முக்கிய திட்டங்கள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் துறைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் வெற்றிகளின் தொடர்ச்சியாக, அரசின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும், ஒரு பெண் அமைச்சர் உட்பட சிலரின் பதிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில்கொண்டு நிர்வாக ரீதியான மாற்றங்களையும், கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. நாளை நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் அதிரடியான சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…