பெங்களூரு ஆர்.ஆர். நகர் அருகே உள்ள பட்டங்கெரே பகுதியில் சனிக்கிழமை காலையில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் சிறுவன் உள்பட மூவர் பலத்த தீக்காயமடைந்தனர். பீகாரைச் சேர்ந்த பாப்லு என்பவர் அப்பகுதியில் பானி பூரி தொழிலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கக் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளார். இரவில் குடோனில் இருந்த சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிந்து அறை முழுவதும் பரவியிருந்த நிலையில், காலையில் அவர் கதவைத் திறந்தபோது பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு வெடித்துச் சிதறியது.
இந்த எதிர்பாராத தீ விபத்தில் சிக்கி பாப்லு, அருகில் நின்றிருந்த லட்சுமம்மா மற்றும் 9 வயது சிறுவன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…