தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது எங்களை பொறுத்தவரை யாரும் தீவிரமாக எதிர்க்க மாட்டோம். கொள்கை அளவில் எதிர்க்கிறோம். தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும் யார் மீதும் கிடையாது. எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது கிடையாது. கரூர் சம்பவத்திற்கு பிறகு தான் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கின்றனர். தமிழக வெற்றி கழகத்தை ஆதரித்து பேசவில்லை. எதிர்த்தும் பேசவில்லை.
ஆனால் தமிழக வெற்றி கழகத்திற்கு பாஜக ஆதரவு தருகிறது என கூற முடியாது. திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்தனர். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தூய்மை பணியாளர்கள் என யாருமே நிம்மதியாக இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் திமுக எல்லாரிடமும் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணத்தையும் சம்பாதித்துள்ளனர். அதை வைத்து தான் வெற்று விளம்பரம் செய்கிறார்கள். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என அந்த கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் கூறினார். பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என நினைக்கின்றனர். கூட்டத்தைக் கூட்டலாமே தவிர ஆட்சிக்கு வர முடியாது என கூறியுள்ளார்.
