2026 தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது?… மார்ச் முதல் வாரத்தில் வெளியாக போகும் அறிவிப்பு…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியல் வெளியான பிறகு பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழு தமிழகம் வரும் என தெரிகிறது. இவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்.

சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதுள்ள சட்டசபையின் பதவிக்காலம் 2026 மே 10ஆம் தேதி என்று முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு அமைய வேண்டும். பொதுவாக ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை மற்றும் தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது