தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சென்றடைவதை அதிகாரிகள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், வரவிருக்கும் பருவமழைக் காலத்திலும் பொதுமக்களுக்கோ, விவசாயப் பணிகளுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தடையற்ற மின் விநியோகத்தை வழங்க தற்போதே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அவர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…