அதிமுக அவைத்தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியது முதல் அந்த கட்சியில் இருந்து வந்த அவர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட சமயத்தில் கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பால் அவருக்கு ஐ சி யூ வில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள தாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
