‘வெயிட்’ போடுதா…? இந்த 4 உணவுகள் பக்கமே போகாதீங்க…! தொப்பையை தவிர்க்க நிபுணர்கள் தரும் அட்வைஸ்…!

By Devi Ramu on மார்கழி 23, 2025

Spread the love

குளிர்காலத்தில் நமது உடலின் செரிமானத் திறன் மற்றும் செயல்பாடுகள் இயற்கையாகவே மந்தமாக இருக்கும். இந்த நேரத்தில் குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதோடு, சளி மற்றும் தொண்டை வலியை உண்டாக்கும். அதேபோல், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் ஏதுமில்லாத வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளதால், அவை உடலில் நச்சுகளை அதிகரித்து உடல் எடையை வேகமாகக் கூட்டுகின்றன.

ஆரோக்கியமாகத் தோன்றினாலும், சமைக்காத பச்சைக் காய்கறிகளை இந்தச் சமயத்தில் சாப்பிடுவது செரிமானச் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், பாக்டீரியா தொற்று ஏற்படவும் வழிவகுக்கும். குளிர்ச்சியான வானிலையில் பலருக்கும் சூடாகப் பொரித்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால், பஜ்ஜி, பக்கோடா போன்ற உணவுகளில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும்.

   

குளிர்காலத்தில் நமது உடல் குறைவான ஆற்றலையே பயன்படுத்துவதால், இந்த உபரி கொழுப்புகள் எரிக்கப்படாமல் அடிவயிற்றில் தங்கித் தொப்பையாக மாறுகின்றன. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புவோர், இந்த நான்கு வகை உணவுகளையும் தவிர்த்து, எளிதில் செரிமானமாகும் சத்தான சூடான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.