நடிகர் ரோபோ ஷங்கரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் ரோபோ சங்கர் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது மனமுடைந்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா மேள தாளத்திற்கு ஆட்டம் ஆடினார். கண் கலங்கியவாறு அவர் தன் கணவரின் இறுதி சடங்கில் ஆட்டம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு பதிலளித்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன், “ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான். அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
