தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனைகளுடன் திரைப்படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் எம் ஆர் ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில் காமெடி, குணச்சித்திரம், ஹீரோ மற்றும் வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர். அதே சமயம் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் இவ்வாறு திகழ்ந்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் இவர் நடித்துள்ளார். எம் ஆர் ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதும் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை. அதன்படி ஒரு முறை இராமாயணத்தை கிண்டல் செய்து ஒரு நாடகத்தை இவர் நடத்தினார்.
அந்த நாடகத்தைப் பார்த்த மக்கள் பலரும் தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி வந்த நிலையில் ஒரு சிலர் எம்ஆர் ராதாவிடமே நாடகம் எங்களுக்கு மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறிவிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட எம் ஆர் ராதா அடுத்த நாள் இந்த நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் வரலாம் ஆனால் தங்கள் மனம் புண்பட்டுள்ளதாக உணரும் எவரும் இந்த நாடகத்தை பார்க்க வர வேண்டாம், அவர்களின் காசு எனக்கு வேண்டாம், இதை பொருட்படுத்தாமல் நாடகத்தை நீங்கள் பார்க்க வந்து உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று ஒரு போஸ்டரை அடித்து ஒட்டி உள்ளார். இதே மாதிரி திருச்சியில் கடவுள் இல்லை என்று எம் ஆர் ராதா ஒரு நாடகம் போட்டுள்ளார்.
அப்போது எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையும் கவிஞர் பாரதியும் அந்த நாடகத்தை பார்க்க சென்றுள்ளனர். நாடக முடிந்த பிறகு எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, என்ன ராதா கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று சொல்லி நாடகம் போட்டுட்டு இருக்க, கடவுள் நம்பிக்கை இருக்கவங்க எல்லாம் உன் நாடகத்தை பார்க்க வராங்க, இதனால அவங்க மனசு புண்படுது என அவர் கூறியுள்ளார். இதைக் கேட்ட எம் ஆர் ராதா, ஏங்க அவ்வளவு பெரிய கடவுள் நான் சொன்னா இல்லாம போயிடுவாரா என்று பதில் சொல்லியுள்ளார். இந்த தகவலை கவிஞர் வாலி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…
நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…
திமுகவில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்…
டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஜிம் வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரமோத் தஹியா என்ற சொத்து வியாபாரி மர்ம நபர்களால்…
திருமணமான வெறும் 13 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவரின் அதிர்ச்சி தரும் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுமனைவி தனது கணவனின்…
தவெக தமிழகத்தில் ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சர்…