35 வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக இருக்கும் தமிழ் நடிகர்கள்.. லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதே..!

By Nanthini on பங்குனி 23, 2025

Spread the love

சினிமாவில் நடிகர் நடிகைகள் தங்களது மார்க்கெட் குறைந்து விடக்கூடாது என்பதற்காக திருமணத்தை தள்ளிப் போடுவார்கள். ஆனால் ஒரு ஐந்து வருடம் 10 வருடம் அவர்களின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது நன்றாக நடித்து சம்பாதித்து விட்டு ஒரு குறிப்பிட்ட வயது 30 அல்லது 35 தாண்டிய பிறகு திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் அந்த ட்ரெண்ட் இப்போது மாறி இருக்கிறது. எல்லா நடிகர் நடிகைகளும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முடிவில் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிக்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் திருமணத்தை தள்ளி போடும்போது அவர்களால் இறுதி வரை திருமணம் செய்து கொள்ள முடியாமலேயே போகிறது. அப்படி 35 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் தமிழ் நடிகர்கள் பற்றி பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டில் புதிய கட்சி; நடிகர் விஷால் அறிவிப்பு | nakkheeran

   

விஷால்:

   

ஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்று  அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். செல்லமே திரைப்படத்தில் நடிகராக வாய்ப்பு கிடைத்து அப்படியே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பொறுப்புகள் சேர,  நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சபதம் எடுத்தார். இடையே இவர் லட்சுமி மேனனை காதலிக்கிறார், சரத்குமார் மகள் வர லட்சுமியை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வெளியானாலும் 47 வயதாகியும் விஷால் இன்னமும் சிங்கிளாக தான் இருக்கிறார்.

 

பிரபல நடிகையை காதலித்து விரைவில் திருமணம் செய்யும் வினய்

வினய்:

உன்னாலே, உன்னாலே  படத்தில் அறிமுகமான நடிகர் வினயும் இன்றும் சிங்கிள் தான். இடையே சின்ன கேப் எடுத்துக் கொண்டு அரண்மனை, துப்பறிவாளன் படங்களில் நடித்த வினய் இப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் வினய் மற்றும் விமலா ராமன் இருவரும் காதலித்து வருகிறார்கள். இருந்தாலும் 45 வயதாகும் வினய் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகின்றார்.

Simbu: புதிய படம் குறித்த ஹிண்ட் கொடுத்த சிம்பு.. பில்டப் ஓவரா இருக்கே..  அப்ப எஸ்டிஆர் 48 படம்? | Actor Simbu gives hint to his new movie and its  making - Tamil Filmibeat

சிம்பு:

சிம்புவின் முதல் காதல் ஒரு புரியாத புதிர். அது மன்மதன் ஐஸூ என்று மட்டும் தெரியும். ஆனால அந்த ரியல் ஐஸூ யார் என்பதில் நிறைய கிசுகிசுக்கள் நிறைந்துள்ளன. பிறகு நயன்தாராவை காதலித்து பிரிந்த சிம்பு, கொஞ்ச காலம் கழித்து ஹன்ஷிகாவை காதலித்தார். அந்த காதலும் குறுகிய காலத்தில் ப்ரேக் அப் ஆனது. தொடர் காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக பயணத்தை மேற்கொண்ட சிம்பு தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் 42 வயதாகியும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

எஸ்.ஜே. சூர்யாவின் அக்காவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

SJ சூர்யா:

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக பமொழிகளிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் SJ சூர்யா. 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அறிமுகமானார். ஆனால் அதே நேரத்தில் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சமீபத்திய வருடங்களில் இவரின் நடிப்பிற்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 56 வயதாகும் SJ சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய்: இசையமைப்பாளராகவும் அறிமுகம் | jai becomes  music director - hindutamil.in

ஜெய்:

சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். இவர் இசையமைப்பாளர் தேவாவின் தங்கை மகன் ஆவார். சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் ஜெய். 40 வயதாகும் ஜெய் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான் - நடிகர் அதர்வா முரளி

அதர்வா முரளி:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த முரளி அவர்களின் மகன் தான் அதர்வா முரளி. பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அதர்வா முரளி முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 35 வயதாகும் அதர்வா முரளி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.