#image_title
இந்திய சினிமா ஆரம்பித்ததில் இருந்தே முன்னணி திரையுலகாக பாலிவுட் என அழைக்கப்படும் இந்தி சினிமா உள்ளது. அதற்குக் காரணம் இந்தி பேசும் மாநிலங்கள் அதிகமாக உள்ளதால் அதன் பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகம். அதன் காரணமாக பட்ஜெட் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் சினிமாதான் என்று பலரும் கருதும் அளவுக்கு உள்ளது.
இதுமட்டும் இல்லாமல் இந்தி சினிமா பிறமொழியில் இருந்து வரும் திறமையான கலைஞர்களை சுவிகரித்துக் கொண்டும் பல வெற்றிப் படைப்புகளைக் கொடுத்துள்ளது. அப்படி தமிழ் சினிமாவில் இருந்து இந்திக்கு சென்று சாதித்தக் கலைஞர்கள் சிலரைப் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் ஆரம்பக் காலத்தில் இருபெரும் ஜாம்பவான் தயாரிப்பு நிறுவனங்களாக இருந்த ஏவிஎம் மற்றும் ஜெமினி ஸ்டுடியோ ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுமே இந்தியில் படங்கள் எடுத்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளன. அதே போல தேவர் பிலிம்ஸும் இந்தியில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முத்திரைப் பதித்தது.
இயக்குனர்கள் என்று பார்த்தால் 60 களில் இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய பல ஹிட் படங்களை இந்திக்கு எடுத்து சென்று ஹிட்களைக் கொடுத்துள்ளார். அதே போல 80 களில் பாலச்சந்தர் ஏக் துக் ஜே கேலியே படம் மூலம் தன்னுடைய முத்திரையை பாலிவுட்டில் பதித்தார். இவர்களை எல்லாம் விட மிகப்பெரிய ஹிட்டை பாக்யராஜ் கொடுத்தார்.
அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமிதாப் பச்சனை வைத்து ஆக்ரி ரஸ்தா(ஒரு கைதியின் டைரி ரீமேக்) படத்தை இயக்கி, அந்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன் பிறகு ஷங்கர் உள்ளிட்ட சில இயக்குனர்கள் இந்தியில் படம் இயக்கினாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் கஜினி திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் வெற்றிபெற்றார். அடுத்தடுத்து அவர் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுதவிர பல நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்து இந்திக்கு சென்று சாதித்துள்ளனர்.
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…
நேபாள நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த தேசமே பெரும் துயரத்திலும் பேரழிவிலும் மூழ்கியுள்ளது. ஆயிரக்கணக்கான…
திமுகவில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் தீவிர மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்…
டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஜிம் வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரமோத் தஹியா என்ற சொத்து வியாபாரி மர்ம நபர்களால்…
திருமணமான வெறும் 13 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவரின் அதிர்ச்சி தரும் கள்ளத்தொடர்பு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதுமனைவி தனது கணவனின்…
தவெக தமிழகத்தில் ஆட்சியமைத்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சர்…