NEWS
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் மேட்ச் பார்க்கச் சென்ற திரை பிரபலங்கள்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…
சென்னையில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியை காண தோனி என்டர்டெயின்மென்ட் குழுவினர் சென்று இருந்தனர்.
அவர்களை தவிர நடிகர் சதீஷ், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் போட்டியை காண நேரில் சென்று இருந்தனர்.
அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலானது.
தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை ரசிகர்களோடு சேர்ந்து பிரபலங்களும் கொண்டாடினர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே அணியின் போட்டியை காண நடிகை திரிஷா சென்றுள்ளார்.
அவருடன் நடிகர் சதீஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண பிரபலங்கள் பலரும் நேரில் சென்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் பகிர்ந்து சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.