அம்பானி வீடு திருமணத்தில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் படையெடுத்து வருகின்றார்கள். இவர் பிரபல என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ-ஆன வீரனே மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் நேற்று தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.
சர்வதேச அளவில் இந்த திருமணம் வைரலாகி வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் ஆனந்த் அம்பானிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருந்தார்கள்.
நேற்று தொடங்கி மூன்று நாட்கள் ஆனந்த அம்பானி ராதிகா மெர்ச்சன் திருமணம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பலரும் வருகை புரிந்திருந்தனர். அந்த வகையில் தென்னிந்தியாவை சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரின் மனைவி லதா, மகள் சௌந்தர்யா, கணவர் விசாகன் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவை சேர்ந்த நயன்தாரா விக்னேஷ் சிவன், ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரின் மனைவி ஜோதிகா, சூர்யா, தெலுங்கு பிரபலங்களான மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி, அதைத் தொடர்ந்து கன்னட பிரபலம் யாஷ், அட்லீ மனைவி பிரியா, பிரித்திவிராஜ் என பல பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் உற்சாக நடனமாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.