நடிகர் பாவா லட்சுமணன் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.அதிலும் மாயி படத்தில் வாம்மா மின்னல் காமெடியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் பாவா லட்சுமணன். இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சௌத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்துள்ளார்.
பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த மக்களிடையே பிரபலமானார். வடிவேலுவுடன் இணைந்து பாவா லட்சுமணன் செய்யும் காமெடி காட்சிகளை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். சமீபத்தில் பாபா லக்ஷ்மணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு ஆரம்பத்தில் சினிமாக்காரங்கன்னு சொல்லி பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
எங்க அம்மா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க. எங்க அம்மா, அப்பா, அக்கான்னு எல்லாருமே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்ப முயற்சி பண்ணாங்க. ஒரு பொண்ணு கிடைச்சது. எல்லாம் பேசி முடிக்கிற நேரத்துல அந்த பொண்ணோட மாமா பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் போகப்போக எனக்கு அந்த ஆசையே விட்டு போயிருச்சு. கல்யாணம் ஆகலைன்னு நான் பீல் பண்ணது கிடையாது. நான் ஒரு தடவை ஜனாதிபதி மாளிகைக்கு போயிருந்தேன்.
ஒவ்வொரு ரூம்ல இருந்தும் வைட் கலர் தொப்பி போட்டுட்டு பத்து பேர் வருவாங்க. அப்துல் கலாம் அவ்வளவு பெரிய ஜனாதிபதி மாளிகையில் தனியாக படுத்திருப்பாரு. சமையல் அவரே பண்ணி சாப்பிடுவாரு. அவ்ளோ பெரிய ஜனாதிபதி மாளிகையில் அவர் தனியா இருந்தாரு. அவர் பெரிய மனிதர். அவரே பயப்படல. நம்ம சாதாரண ஆளு. அதனால கல்யாணம் நடக்கலன்னு நான் பீல் பண்ணது இல்ல என பேசி உள்ளார்.