Connect with us

CINEMA

முடிவுக்கு வந்த தமிழும், சரஸ்வதியும் சீரியல்.. கடைசி நாளில் கேக் வெட்டி கொண்டாட்டம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

   

பணக்கார குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகரும். இதில் தீபக் ஹீரோவாக நடிக்கிறார். நட்சத்திரா நாகேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த வாரமே சீரியல் முடியப்போவதாக செய்தி வந்தது.

இன்று தமிழும் சரஸ்வதியும் சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துள்ளனர். அப்போது நடிகர் நடிகைகள் கடைசியாக செல்ஃபி எடுத்துள்ளனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சீரியல் முடிய போவதை நினைத்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top