#image_title
சினிமாவில் நடிகையாக வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி கிடைத்த வாய்ப்பை எந்த ஒரு நடிகையும் தக்க வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள். அப்படி நடிகையான பின்பும் அதற்கும் ஒரு கால வரையறை உண்டு. 10 முதல் 20 ஆண்டுகள் வரை தான் அதிகபட்சம் அவர்களால் நடிகையாக நடிக்க முடியும். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டால் தான் நடிகையாக நடிப்பதற்கு தடையாக இருக்குமே என்று சில நடிகைகள் திருமணத்தை தள்ளி போடுவார்கள். சில நடிகைகள் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே சென்று விட்டதால் திருமணம் ஆகாமல் இருக்கின்ற நடிகைகளும் உண்டு. அப்படி 35 வயதை கடந்தும் தமிழ் சினிமாவில் சிங்கிளாக இருக்கும் நடிகைகளின் பட்டியலை இனி காண்போம்.
1. ஸ்ருதிஹாசன்:
ஸ்ருதிஹாசன் உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பணியாற்றியுள்ளார். ‘ஏழாம் அறிவு’, ‘3’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதிஹாசன்.
38 வயதாகும் ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவருடன் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறிவிட்டு தற்போது பிரேக்கப் செய்துவிட்டு சிங்கிளாக இருக்கிறார்.
2. பூனம் பஜ்வா:
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடிக்கும் நடிகை ஆவார். 2006 ஆம் ஆண்டு ‘சேவல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘ஆம்பள’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘குப்பத்து ராஜா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். 39 வயதாகும் பூனம் பஜ்வா திருமணம் செய்து கொள்ளாமல் என்னும் சிங்கிளாக தான் இருக்கிறார்.
3. திரிஷா:
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடிகையாக நடித்துக் கொண்டு அதே பிரபலத்துடன் வலம் வருபவர் திரிஷா. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பான் இந்தியா நடிகையாக ஆனவர் திரிஷா. அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிகையாகவே இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணமே இன்னும் செய்து கொள்ளாத திரிஷா எந்த நடிகருடனும் சர்ச்சையிலும் சிக்காதவர். இவருக்கு வயது 41.
4. அனுஷ்கா:
அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார். ‘அருந்ததி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்ற அனுஷ்கா, பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்திய நடிகை ஆனார். இளவரசி, மகாராணி தோற்றம் அனுஷ்காவுக்கு கச்சிதமாக பொருந்தும். 42 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
5. கிரண்:
நடிகை கிரண் ரத்தோட் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த ‘ஜெமினி’, ‘வில்லன்’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’, ‘தென்னவன்’ போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. ஆரம்பத்திலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர் கிரண். தற்போது 43 வயதாகியும் கிரண் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத தேர்தல் முடிவுகள், ஒரு புதிய அதிகாரப் போட்டியை உருவாக்கியுள்ளன. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை…
வீட்டின் செல்வம் பெருகவும், தடைகள் நீங்கி தொழில் முன்னேற்றம் காணவும் துளசி செடியில் தானாகவே காய்ந்த துளசி மொட்டுகள் (மஞ்சரி)…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவைப் பட்டியல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கட்சிக்குள் பல்வேறு பதவிகளுக்கான பெயர்கள் அடிபடுகின்றன.…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது முதல்வர் வேட்பாளர் என்ற பெருமையை…