“சந்தேகம் இருக்கு” தவெக-விடம் தோற்ற திமுக.. நீதிமன்றத்தில் வழக்கு போடும் உதயநிதி… கடும் அதிர்ச்சியில் விஜய்…!!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்பதாகத் தெரிவித்தார். மேலும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்காகத் தான் நேர்மையாகவும் சிறப்பாகவும் செயல்படப் போவதாக அவர் உறுதி அளித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்தத் திரில் வெற்றியை அடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் பயணத்தில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது என்றும், தங்களது கடமையைச் செய்துள்ள நிலையில் மக்கள் முடிவை ஏற்பதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறிய அவர், “காத்திருங்கள், ஆட்சி அமையும் போது பார்ப்போம்” எனத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பறிபோன வெற்றியை மீட்டெடுக்க திமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறது.

Soundarya

Recent Posts

உதயநிதிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பேஸ் முடிந்தது… பொறுமையா இருந்தது இதுக்குதான்…. அம்பலப்படுத்திய நடிகர் ஷாம்…!

தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…

38 seconds ago

திமுகவிலிருந்து விலகுகிறாரா செந்தில் பாலாஜி?… அதிமுக, பாஜகவுக்கு கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்.. சட்டசபையில் நடந்த அதிரடி திருப்பம்…!

அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…

10 minutes ago

“நாங்க மட்டும் இல்லன்னா அன்னைக்கு பதவியேற்பே நடந்திருக்காது”.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் கொடுத்த அதிரடி ஷாக்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

17 minutes ago

“எமர்ஜென்சிக்கே அஞ்சாத நாங்க இதுக்கா பயப்படப் போறோம்?”… தவெக-வை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…

23 minutes ago

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

29 minutes ago

“நம்ம பெப்ஸி உமாவா இது?.. இத்தனை வருசமா எங்க இருந்தாங்க?”… வைரலாகும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 90s கிட்ஸ்…!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…

36 minutes ago