முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

By Mahalakshmi on வைகாசி 9, 2024

Spread the love

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் வெளிவந்த பல படங்களில் ஹீரோயினியாக நடித்த நடிகைகள் பின்னர் அதே ஹீரோவுக்கு அம்மாவாகவும் நடித்த கொடுமை எல்லாம் இருக்கின்றது. சினிமாவில் நடிகைகளுக்கு வயதாவது போல் நடிகர்களுக்கு மட்டும் வயசு ஆவதில்லை.

அப்படி யார், யார் எந்தெந்த நடிகருக்கு அம்மாவாகவும், ஜோடியாகவும் நடித்துள்ளார்கள் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். முதலில் கல்கி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருந்தவர் கீதா. அதைத்தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கீதா நடித்திருப்பார்.

   

   

அதைத்தொடர்ந்து அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயபாரதி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த ஜெயபாரதி கமலஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு அம்மாவாகவும் முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அத்தையாகவும் சரத்பாபுவுக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார்.

 

இதனையடுத்து அவர்கள் என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தான் சுஜாதா. இந்த சுஜாதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாபா திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார். சினிமாவை பொறுத்தவரை ஹீரோன்களுக்கு மட்டும் வயது என்பது அதிகரிக்கிறது. ஹீரோக்களுக்கு எப்போதும் வயதாகவே இல்லை. 70 வயதானாலும் இளம் நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவ்வளவுதான் அவர்கள் ஃபீல் டவுட் ஆகி விடுகிறார்கள். அவர்களை ஹீரோயினியாக எந்த திரைப்படத்திலும் அவர்களை புக் செய்வதற்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு அம்மா, அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களை கொடுக்கிறார்கள்.

வேறு வழி இல்லாமல் ஹீரோயின்களும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடித்து விடுகிறார்கள். ஹீரோக்களுக்கு அப்படி கிடையாது. ஒருமுறை டாப் ஹீரோ என்ற பட்டியலில் வந்துவிட்டால் எவ்வளவு வயதானாலும் ஹீரோவாகவே அவர்கள் நடித்து வருவார்கள். அவர்களுக்கு இளம் நடிகைகள் ஜோடியாக நடிக்கும் சம்பவம் தற்போது வரை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமாவில் கமலஹாசன், ரஜினி ஆகியோருக்கு 70 வயது கடந்த நிலையிலும் கூட தற்போது திரிஷா, நயன்தாரா, தமன்னா ஆகியோருடன் ஜோடியாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.