இது vacation time… விடுமுறையை கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த காதல் பறவைகள்… வைரலாகும் வீடியோ…

By Begam on ஆவணி 26, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார். சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது.

   

இந்நிலையில் விஜய் வர்மாவுடனான தனது காதலை நடிகை தமன்னா உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த பேட்டி ஒன்றில் ‘ஒருவருடன் இணைந்து நடிக்கிறோ‌ம் என்பதால் அவர் மீது ஈர்ப்பு வந்துவிடாது. பல நடிகர்களுடன் நான் நடித்துள்ளேன். ஒருவர் யார் மீதாவது காதலில் விழவேண்டும் என்றால் அந்த ஒருவருக்காக எதையாவது உணரவேண்டும்.

   

 

நான் எனக்கான உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இந்தியாவில் ஒரு பெண் தனது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். எனது உலகத்தை புரிந்துக் கொண்ட ஒருவர் கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்’என்று தெரிவித்திருந்தார்.

தற்பொழுது நடிகை தமன்னாவும் , நடிகர் விஜய் வர்மாவும் இணைந்து lust stories என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடிகை தமன்னாவின் காதலரான விஜய் வர்மா தற்பொழுது ‘கால்கூட்’ என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் ஜியோ ஓடிடி தளத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கால்கூட் பிரீமியர்  நிகழ்ச்சியில் தனது காதலருடன் நடிகை தமன்னா கலந்து கொண்டுள்ளார்.

இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமன்னாவும் விஜயும் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்று ஆகஸ்ட் 26 அன்று, அவர்கள் இருவரும் தனி தனியாக விமான நிலையத்திற்கு வரும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருவரும் தனித்தனியாக வந்திருந்தாலும், அவர்கள் ஒரு ரொமான்டிக் விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)