விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா…. 250 கோடி சொத்தா..? வைகோ பரபரப்பு பேட்டி…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

துரை வைகோவுக்கு செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து உள்ளதாக மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், “செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தில் ரூ.5 கோடிக்கு அரண்மனை போல் வீடு கட்டியுள்ளார்.  இது யாருக்கும் தெரியாமல் இருக்க கடந்த வாரம் யாரையும் அழைக்காமல் வீட்டில் கிரகப் பிரவேசம் செய்துள்ளனர். வீட்டை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அதில், “எனது நேர்மையை உலகு அறியும். என் அரசியல் விரோதிகள்கூட சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. மல்லை சத்யாவின் குற்றச்சாட்டானது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என கூறியுள்ளார்.