தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மழையின் தீவிரத்தை பொறுத்து நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா அல்லது பள்ளிகள் வழக்கம் போல செயல்படுமா என்பது குறித்து நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழைப்பொழிவை பொறுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
