தவெக-வுடன் செந்தில் பாலாஜி…. ஜூலை 10 டார்கெட்…. விஜய் கரூருக்குள் நுழையும் முன் இது நடக்குமா?…. பனையூர் வட்டாரத்தில் கசிந்த அதிர்ச்சித் தகவல்…!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்.எல்.ஏ. குதிரை பேரம் தொடர்பான வழக்கில், கைதில் இருந்து தப்பிப்பதற்காக தவெக தலைமையுடன் செந்தில் பாலாஜி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரகசியப் பேச்சுவார்த்தை காரணமாகவே, அவர் தன் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் திட்டமிட்டு கால தாமதம் செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும், முதல்வர் விஜய் அவர்கள் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே, செந்தில் பாலாஜி நிச்சயம் கைது செய்யப்படுவார் என பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலக வட்டாரங்கள் மிக உறுதியாகத் தெரிவிப்பது தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.