இந்தியாவுக்கு வந்த இடத்தில் இதையா பார்க்கணும்? …. “நம்ம ஊரு குப்பையை வெளிநாட்டுப் பெண் அள்ளுறா… வெட்கமா இல்ல?”….. முசூரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

உத்தராகண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற மலைவாசல் தலமான முசூரிக்கு அருகில் உள்ள டலாய் ஹில்ஸ் பகுதிக்குச் சென்ற இந்திய டிஜிட்டல் கிரியேட்டர் ஆனந்தும் அவரது தைவான் நாட்டு தோழியும், அங்கு சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். புத்தர் சிலைகளும் பிரார்த்தனைக் கொடிகளும் நிறைந்த அப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்கச் சென்ற அவர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளின் பொறுப்பற்ற செயலால் அங்கு மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் பெருத்த ஏமாற்றத்தை அளித்தன.

அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலிராமல், அந்த வெளிநாட்டுப் பெண்ணும் ஆனந்தும் தாங்களாகவே முன்வந்து அங்கிருந்த குப்பைகளைத் கைகளால் அள்ளத் தொடங்கினர். ஆனந்த் தடுத்தும் கேட்காமல் அந்த தைவான் தோழி குப்பைகளைச் சேகரித்த விதம் பலரைக் வியப்பில் ஆழ்த்தியது. “ஒரு வெளிநாட்டுப் பயணி வந்து நம் நாட்டின் சுற்றுலாத் தலத்தைச் சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளதே” என்று ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்திய வேதனை பலரைக் குமுறச் செய்தது.

   

https://www.instagram.com/reel/DfPaIwKzpBX/?utm_source=ig_embed&ig_rid=ARiXi4twqzR2N5zIbod3anD

   

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தச் சம்பவம், நம்மிடையே ‘சிவிக் சென்ஸ்’ எனப்படும் பொது ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. ‘மலைகளின் ராணி’ என்று வர்ணிக்கப்படும் முசூரியின் இயற்கை அழகைப் பொறுப்பற்ற முறையில் குப்பைகளால் பாழ்படுத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சாட்டையடி விமர்சனமாக அமைந்ததுடன், பலரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

 

மறுபுறம், சுற்றுலாத் தலங்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை வெளிப்படுத்திய இந்த வெளிநாட்டுப் பெண்ணின் நற்செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேசமயம், நமது நாட்டின் அழகைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்த்தும் இத்தகைய சம்பவங்கள், எதிர்காலத்திலாவது சுற்றுலாப் பயணிகள் தங்களது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள ஒரு பாடமாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.