குஷியோ குஷி..! தாட்கோ கடன் முற்றிலும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!

By Soundarya on சித்திரை 17, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அதிரடியான பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (தாட்கோ) ஆதிதிராவிட மக்கள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது கடன் சுமையில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படுவதோடு, அவர்களுக்குச் சொந்தமான இடத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என தவெக உறுதி அளித்துள்ளது. பொருளாதார ரீதியாக இந்தச் சமூகங்களை வலுப்படுத்த, முதல் தலைமுறை தொழில்முனைவோருக்குத் தொழில் தொடங்குவதற்கான முதலீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இத்திட்டங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.