தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக திறமையோடு கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் டி ராஜேந்தர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டிற்கு சென்ற சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து உடல் நலம் தேறியுள்ள டி ராஜேந்தர் சமீபத்தில் ரஜினியின் கூலி திரைப்படத்தில் வரும் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு டி ராஜேந்தரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் பிரபல காமெடி நடிகர் கிங்காங் டி ராஜேந்தரை நேரில் சந்தித்து தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி அசோக் பில்லர் அருகே உள்ள பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் நடிகர் கிங்காங் மகள் திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணியில் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தான் கிங்காங்.

அவருடைய மூத்த மகள் கல்லூரி படிப்பை படித்து முடித்த நிலையில் வருகின்ற ஜூலை 10-ம் தேதி திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள கிங்காங் சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றார். சமீபத்தில் கூட பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பெங்களூரில் உள்ள அவருடைய இல்லத்திற்குச் சென்று சந்தித்து குடும்பத்துடன் அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இப்படியான நிலையில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தருக்கு திருமண அழைப்பிதழை கிங்காங் வழங்கியுள்ளார். உடல் நலக்குறைவு எல்லாம் சரியாகி மீண்டும் சினிமாவில் களமிறங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வரும் டி ராஜேந்தர் புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். தன்னுடைய மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் வழங்க வந்த கிங்காங்கை பார்த்து சந்தோஷப்பட்ட டி ராஜேந்தர் சிறுவயதிலிருந்தே உன்னோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ராஜா, இப்போ நான் ஒரு படம் பண்ண போறேன் அதில் ஒரு சிறிய கேரக்டர் உனக்கு தருகிறேன் நடிக்கிறியா என்று கேட்டதும் கண்டிப்பாக பண்றேன் என்று மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கச் சென்ற இடத்தில் சிம்பு அப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கிங்காங் பெற்று வந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
