தலையே சுத்துதே.! 1 கிலோ மாம்பழம் ரூ.1 லட்சமா..? நடிகர் அருண்பாண்டியன் தோட்டத்து மாம்பழத்துல அப்படி என்ன ஸ்பெஷல்…??

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 1987 ஆம் வருடம் வெளியான இளம் ஜோடிகள் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் அருண்பாண்டியன். அதன் பிறகு விசு இயக்கத்தில் வெளியான சிதம்பர ரகசியம் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் எஸ்வி சேகர், விசு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்தார்கள். அதன் பிறகு ஊமை விழிகள்,  இணைந்த கைகள், ஊழியன், தாயகம் உட்பட சில வெற்றிப் படங்களில் நடித்த இவர் வீரநடை, ரிஷி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். நடிகர்  மட்டுமல்லாமல் தேவன் படத்தின் மூலம் இயக்குனராகவும்  உச்சம் பெற்றார். 2010 ஆம் வருடம் விஜய் நடிப்பில் விருதகிரி படத்தில் நடித்த அருண்பாண்டியன் அதன் பிறகு இரண்டு படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்து திறமை கொண்ட அருண்பாண்டியன் அடிப்படையில் ஒரு ஆர்கானிக் விவசாயி. இவர் சென்னையில் தொழில்களை கவனித்து வந்தாலும் மாதத்தில் பத்து நாட்கள் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று தன்னுடைய கிராமத்திலேயே தங்கி விடுவார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ” ஜப்பான் நாட்டு மாம்பழம் தன்னுடைய தோட்டத்தில் இருப்பதாகவும், அந்த மாம்பழத்தின் விலை ஒரு கிலோ ஒரு லட்சம் என்றும், சமீபத்தில் தான் அதை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறோம். என்னுடைய அப்பாவிற்கு 95 வயது. இதுவரை எங்களுடைய தோட்டத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பா கூட அவர் பயன்படுத்தியது இல்லை” என்று கூறியுள்ளார்.