#image_title
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.
ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
ரஜினி, கமல் போன்றோருக்கான மாஸ் ஆடியன்ஸ்கள் இருப்பது போலவே டி ஆருக்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அவருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவரின் அந்த காலத்து கதைகள் பல இப்போது சீரியல்களாக எடுக்கப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன.
#image_title
ஆனால் எல்லா பிரபல இயக்குனர்களுக்கும் நடப்பது போன்ற ஒரு தேக்க நிலை டி ராஜேந்தருக்கும் நடந்தது. 90 களுக்குப் பிறகு அவரின் படங்கள் சரியாக ஓடவில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய காலம் முடிந்துவிட்டதை அறிந்து மகன் சிலம்பரசனைக் கதாநாயகனாக்கிவிட்டு திரையுலகை விட்டு விலகினார்.
டி ராஜேந்தர் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஒரு தலை ராகம்’ படத்தில் அவருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது பலருக்கும் தெரியாது. ஒரு தலை ராகம் படத்தை இயக்கியது டி ராஜேந்தர்தான். ஆனால் டைட்டில் கார்டில் இயக்கம் என்ற கார்டில் ‘ஈ எம் இப்ராஹிம்’ என்றுதான் வரும். தயாரிப்பாளர் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த தவறை செய்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மேடையில் ‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் கார்டில் இப்ராஹிம் தன் பெயரைப் போட்டுக்கொண்டார். ஆனால் அதில் என்னக் கிழித்துவிட்டார். இயக்குனராக அவர் இன்று அறியப்படுகிறாரா?’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக புதுச்சேரியில் TVK சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…