விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசி இருந்தார். ராகுல் காந்தியின் பிரதிநிதியாக விஜயை சென்று சந்தித்து பேசினார்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள தலைவர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரஸில் ராகுல் காந்தி புதிதாக தொடங்கிய Data Analyst பிரிவின் தலைவராக பிரவீன் சக்கரவர்த்தி செயல்பட்டு வருகின்றார். இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகருடன் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். நண்பர் என்ற முறையில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்ததாக திருச்சி வேலுசாமி தெரிவித்துள்ளார். இருந்தாலும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகியாக இருக்கும் அவர் விஜயின் தந்தையை சந்தித்து பேசியது கூட்டணிக்காகவா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூருவில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் வந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த தொழிலதிபர் ஒருவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து…
அண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆடம்பரமான வீடு மற்றும் வசதிகளைக் கண்டு ஈர்க்கப்பட்ட 26 வயது இளம்பெண், தனது…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓய்வுபெற்ற டிஜிபி-யுமான ஆர். நடராஜ் விரைவில் தமிழக…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினரான சரவணன், ₹20 கோடி மோசடி புகாரில் போலீசாரால்…
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி சேவையைப் பயன்படுத்திய பெண் ஒருவர், பயணம் முடிந்த பிறகு அந்த வாகன ஓட்டுநர்…
தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக…