Categories: சினிமா

அந்த பாடகியோடு பாட பயந்துகொண்டே சென்ற TMS.. எம் ஜி ஆரையே எதிர்த்துப் பேசியவரல்லவா?… சுவாரஸ்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.

டி எம் சௌந்தர்ராஜன் 10000க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்த காலகட்டங்களில் அதிகளவில் மேடைக் கச்சேரிகளில் அவர் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தார். அதில் சினிமா மேடைக் கச்சேரிகளும் கோயில் திருவிழா போன்ற மேடைக் கச்சேரிகளிலும் பங்கேற்று பாடல்களை பாடினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர். இளையராஜா தன் இசையில் டி எம் சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தவே இல்லை.

இந்நிலையில் டி எம் எஸ்-ன் மகள் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஆரம்ப காலத்தில் என் அப்பா நடிகை பானுமதியோடு இணைந்து ஒரு பாடலை பாடினார். அந்த பாடல் பாடும்போது அவர் திரைத்துறைக்குப் புதிது. வயதிலும் இளையவர். அதனால் பானுமதி அவர்களோடு இணைந்து பாட பயந்துகொண்டே சென்றாராம்.

ஏனென்றால் பானுமதி அவர்கள் மிகவும் தைரியமானவர். அவர் எம் ஜி ஆரையே எதிர்த்துப் பேசி ஆட்டிப் படைத்தவர். அதனால்தான் அப்பா பயந்தாராம். பாட்டு பாடி முடிந்ததும் பானுமதி அம்மா “நல்லா பாடுனப்பா” எனப் பாராட்டினாராம். அதைக் கேட்டு என் அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

11 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

15 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

29 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

37 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

42 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

42 minutes ago