மதுரையை பூர்விகமாக கொண்ட நடிகர் ஷிஹான் ஹூசைனி கமல் நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருப்பார். இதுவரை நான் இருக்கும் மேற்பட்ட வின்வித்த வீரர்களுக்கு பயிற்சி அளித்து தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாகவும் திகழ்கின்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காத்து வாக்காளர் ரெண்டு காதல் திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவை கலந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது. சினிமா ரசிகர்களும் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து ரசித்தனர்.
இப்படியான நிலையில் தன் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதாக சமீபத்தில் அவர் ஊடகங்கள் மூலமாக தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 60 வயதாகும் இவர் ஒரு நாள் உயிர் வாழ இரண்டு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும், மருத்துவர்களும் கைவிட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். பிறகு தான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை எனது வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தது பலரையும் கலங்க வைத்தது. மருத்துவமனையில் தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கும் இவருக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் உதவி தொகை அளித்துள்ளது.
அதே சமயம் விஜய் மற்றும் பவன் கல்யாண் சந்தித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் தான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோட இருப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் சிகிச்சையில் இருக்கும் இவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்.
மேலும் என் இதயத்தை மட்டும் பாதுகாக்க வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனடியாக வந்து ஏன் அதிகாரப்பூர்வ ஒப்புதலையும் எனது கையொப்பத்தையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு பலரையும் தற்போது கலங்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…